George / 2015 ஜூன் 29 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை, ஜூன் 30ஆம்; திகதி பூமி தனது வழக்கமான சுழற்சி வேகத்தை இழப்பதால் 1 விநாடி அதிகமாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியனை மையமாகக் கொண்டு பூமி உட்பட சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் இயங்கி வருகின்றன.
பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனை ஒரு தடவை முழுமையாக சுற்றி முடிப்பதை ஓராண்டு என்கிறோம்.
பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்வது ஒரு நாள் எனக் கொள்ளப் படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு 24 மணி நேரம் ஆகும். இந்த 24 மணி நேரத்தில் பகல் 12 மணி நேரமாகவும் இரவு 12 மணி நேரமாகவும் உள்ளது.
தற்போது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்வதற்கு 86 ஆயிரத்து 400 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது. இந்நிலையில், நாளை பூமியின் இந்த வேகம் இன்னும் குறைய இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நாளை கால அளவு 1 விநாடி அதிகமாக இருக்கும். பொதுவாக ஒரு நாள் முடியும் போது, சர்வதேச ஒருங்கிணைப்பு திட்ட நேரம் (யு.டி.சி) 23:59:59: என்று காட்டும். அடுத்த வினாடி அது 00:00:00 என மறுநாள் கால நேர கணக்கைத் தொடங்கி விடும்.
21 minute ago
23 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
23 minute ago
2 hours ago
3 hours ago