Editorial / 2025 மார்ச் 18 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினையை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த டிவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கி எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். அதன் பிறகு எக்ஸ் பக்கத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன.
எனினும் நீல நிற டிவிட்டர் பயன்பாடு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனிடைஏ டிவிட்டர் நிறுவனத்தின் நீல நிறப் பறவை இலச்சினை ஏலத்திற்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஏலத்தின் ஆரம்ப விலையாக 21,664 டொலர் (ரூ. 18.2 லட்சம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் எடுப்பவர்கள் இலச்சினையை எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும் என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த இலச்சினை 12 அடி உயரமும் 8 அடி அகலமும் கொண்டது. இதன் எடை 254 கிலோ. இலச்சினையை தலைமை அலுவலகத்தில் இருந்து அகற்ற பயன்படுத்தப்பட்ட கிரேன் மற்றும் ஊழியர்களின் ஊதியத்தையும் இந்த ஏலம் உள்ளடக்கியுள்ளதாகத் தெரிகிறது. மார்ச் 20ஆம் தேதி வரை ஏலம் நடைபெறும் என்றும் அதன் பிறகு அதிக தொகை கோரியவர்களுக்கு இலச்சினை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
48 minute ago
55 minute ago
1 hours ago