2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

32000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட உலகின் முதல் டேப்லெட்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கும் ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி 32000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் 2 ஆயிரத்து 720 மணி நேரத்திற்கு ஸ்டான்ட்-பை வழங்கும்.

பிரீமியம் ரக்கட்ட டேப்லெட் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 24 ஜிபி வரையிலான ரேம் (12 ஜிபி ரேம், 12ஜிபி வரை நீட்டிக்கும் வசதி), மீடியாடெக் டிமென்சிட்டி 720 5ஜி பிராசஸர், MIL-STD-810H சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் IP68 மற்றும் IP69K சான்று பெற்றுள்ளது.

இதில் வழங்கப்படும் 32000 எம்ஏஹெச் பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 48MP பிரைமரி கேமரா, 20MP நைட் விஷன் சென்சார் மற்றும் மேக்ரோ லென்ஸ் வழங்கப்படுகிறது. புதிய ஔகிடெல் RT7 டைட்டன் 5ஜி மாடலின் விலை 999.97 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 82 ஆயிரத்து 681 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .