2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

FB இல் வரவுள்ள மாற்றங்கள்

Editorial   / 2018 ஒக்டோபர் 29 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடியோ சட்டிங் குரல்வழி அழைப்பு மற்றும் கோப்புக்களை பரிமாறல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது.

இதனை உலகளவில் சுமார் 1.3 பில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் சில அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பயனர்கள் இந்த அப்பிளிக்கேஷனை இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்படி சில அம்சங்கள் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மற்றும் சில அம்சங்கள் தரப்பட்டுள்ள இடங்களில் இருந்து வேறு இடங்களில் மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் 2014 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டிலிருக்கும் இந்த அப்பிளிக்கேஷனின் பயன்பாடு வரவுள்ள மாற்றங்களினால் எந்த குந்தகமும் விளையாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X