2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

Halo 5 ஐ தரவிறக்குவதில் பிரச்சினைகள்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Xbox விளையாட்டுக்களில் ஒன்றான Halo 5, கடந்த செவ்வாய்க்கிழமை (27) வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இந்த விளையாட்டை விளையாடுவதற்கு ஆர்வத்துடன் காத்திருந்த கணினி விளையாட்டுப் பிரியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

இந்த விளையாட்டை தரவிறக்குவதுக்கு மணித்தியாலக் கணக்காக நேரம் எடுத்ததாக சில கணினி விளையாட்டுப் பிரியர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

Halo 5 விளையாட்டானது 55GB ஆகவுள்ளதுடன், இதனுடன் இணைந்த வேறு 9GB ஐ தரவிறக்கவேண்டியுள்ளது. இந்த விளையாட்டை இணையத்தில் விளையாடும் முகமாக இந்த வேறான 9GB ஐயும் சேர்த்தே தரவிறக்கவேண்டியுள்ளது.

இந்த விளையாட்டை தரவிறக்கியவர்களில் ஒருவர், ஏழு மணித்தியாலமாகியும் தரவிறங்கி முடியவில்லை எனவும், இன்னொருவர் மணித்தியாலக் கணக்காக 85 சதவீதத்திலேயே நின்று கொண்டிருப்பதாகவும், இன்னொருவர் பத்து மணித்தியாலமாகியும் 34 சதவீதத்திலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் மைக்ரோசொப்ட் நிறுவனம், இது பற்றி கருத்து எதனையும் தெரிவித்திருக்கவில்லை.

எனினும் பெரிய கணினி விளையாட்டை தரவிறக்கி, நிறுவி, இற்றைப்படுத்துதில் பிரச்சினைகள் காணப்படுவது பொதுவானது என கணினி விளையாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X