Shanmugan Murugavel / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Teslaவின் Model 3 மின் கார் வெளிப்படுத்தப்பட்டுள்ளது தற்போது வரையில் Teslaவின் மிகக் குறைந்த விலையுடைய வாகனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து பேர் அமரக்கூடிய மேற்படி Tesla Model 3 மின் காரின் விலையும் அதன் வீச்சமும் Tesla Model 3 மின் காரை புதிய வகையான வாடிக்கையாளர்களிடன் கொண்டு சேர்க்கும் எனவும் ஏனைய மின் வாகனங்களின் மீதான விருப்பத்தை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தயாரிப்பு முழுமையான வேகமெடுத்தவுடன் ஒரு வருடத்தில் 500,000 வாகனங்களை தயாரிப்பதை இலக்காகக் கொண்டிருப்பதாக Teslaவின் பிரதம நிறைவேற்றதிகாரி ஈலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். இதேவேளை, கடந்த வியாழக்கிழமை (31) அறிமுகம் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை (02) வரை 276,000 Tesla Model 3 மின் கார்களுக்கான முற்பதிவுகள் கிடைக்கப் பெற்றதாக ஈலோன் மஸ்க் கூறியுள்ளார்.
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட Tesla நிறுவனம் வர்த்தகத்தில் நிலைநிற்க வேண்டுமானால் மேற்படி Tesla Model 3 மின் காரானது பிரபலமடைய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப நாட்களில் அதிக எண்ணிக்கையான முற்பதிவுகள் கிடைக்கப் பெற்றாலும் கார் வெளியாகும்போது அவையனைத்தும் விற்பனையாகும் என்று நிச்சயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே மேற்படி Tesla Model 3 மின் காரானது முதன்முறையாக விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. Tesla Model 3 மின் காருக்கான முற்பதிவுகளை ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து, பிரேஸில், இந்தியா, சீனா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மேற்கொள்ளமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tesla Model 3 மின் காரின் அடிப்படை மாதிரி ஆனது 35,000 ஐக்கிய அமெரிக்க டொலர் என்பதுடன் ஒரு தடவை மின்னேற்றியதோடு 346 கிலோமீற்றர் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
39 minute ago
50 minute ago