2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

அப்பிள் நிறுவனத்துக்கு அ.டொ 862 மில். அபராதம்

Gavitha   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய ஆராய்ச்சியாளர்கள் உட்பட 4 பேர் கொண்ட குழுவினரின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்திய அப்பிள் நிறுவனத்துக்கு அமெரிக்க டொலர் 862 மில்லியனை நட்டஈடாக  வழங்கவேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கணினித்துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் இலத்திரனியல் துறை பேராசிரியர் டெரனி விஜயகுமார் ஆகிய இருவரும் இராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றவர்கள்.

இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட குழுவினர்,  அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும், பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் ஆராய்ச்சி அமைப்புக்கு மென்பொருள் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.  அதிவேகமாக செயல்படக்கூடிய இந்த் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமையையும் இவர்கள் பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இவர்கள் உருவாக்கிய இந்த நவீன தொழில்நுட்பத்தை, அப்பிள் நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தி வருவதாக, அமெரிக்காவின் மேடிசன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதன்பின்னரே, விஸ்கான்சின் பல்கலைகழக ஆராய்ச்சி அமைப்புக்கு, அப்பிள் நிறுவனம் அமெரிக்க டொலர் 862 மில்லியனை நட்டஈடாக  வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .