2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அப்பிளின் மின்கல நீடிப்பு உறை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்கலத்துடன் கூடிய ஐபோன் உறைகளை Mophie, Otterbox உள்ளிட்டமை தயாரித்து வருகின்றமையில், தற்போது இந்தச் சந்தையில் அப்பிளும் குதித்துள்ளது.

வழமையாக தனது எந்தவொரு தயாரிப்பை வெளியிடும்போது பரபரப்பை உண்டாக்கும் அப்பிள், இந்த முறை தமது தயாரிப்பை சத்தம் சந்தடையின்றி வெளியிட்டுள்ளது.

அப்பிளால் ஸ்மார்ட் மின்கல உறையென அழைக்கப்படும் மேற்படி சாதனமானது ஐபோன் 6, ஐபோன் 6sஇன் ஆயுட்காலத்தை அதிகரிக்கவுள்ளதுடன், இதன் விலை 99 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும். இது, கடந்த செவ்வாய்க்கிழமை (08) முதல் சந்தைக்கு வந்துள்ளது.

ஐபோன் 6s மின்கலத்தின் ஆயுட்காலமானது பதின்னான்கு மணித்தியாலமளவில் கதைக்கும் நேரத்தையும் பதினொரு மணித்தியாலம் HD காணொளிகளைப் பார்வையிடும் வகையிலும் பத்து மணித்தியாலம் LTE இணையப் பாவனை வரை நிலைத்திருக்கும் நிலையில், ஸ்மார்ட் மின்கல உறையின் மூலம் ஐபோன் 6sஇன் மின்கல ஆயுட்காலமானது, இருப்பத்தைந்து மணித்தியாலம் கதைக்கும் நேரத்தையும் இருபது மணித்தியாலம் HD காணொளிகளை பார்வையிட முடியும் என்பதுடன் பதினெட்டு மணித்தியாலம் LTE இணையப் பாவனையை மேற்கொள்ளமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 80 சதவீதமளவில் மின்கலத்தின் ஆயுட்காலம் அதிகரிக்கப்படுகின்றது.

இதேவேளை, போட்டிக்கு சந்தையில் மூன்றாம் தரப்பு தயாரிப்பு மின்கல நீடிப்பு உறைகள் உள்ளபோதும், தமது மின்கல நீடிப்பு உறைகள் வேறுபடுத்தப்பட்டு முன்னிலை பெறுவதற்கான காரணங்களை அப்பிள் கொண்டுள்ளது.

அதன்படி, அப்பிளின் மின்கல நீடிப்பு உறையினைக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களின் ஐபோன் முகப்புத் திரையில் அவர்களின் மின்கல நீடிப்பு உறையானது எவ்வளவு சதவீதம் மின்னைக் கொண்டிருக்கின்றது என்பதைக் காட்டவுள்ளதுடன், மூன்றாம் தரப்பு மின்கல உறைகள் போன்று, அவற்றை மின்னேற்றுவதற்கு தனியான வயரைக் கொண்டிருக்காமல், ஐபோனை மின்னேற்றும் அதே வழியினாலேயே மின்னேற்ற முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X