2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

அரசு உளவு பார்த்தால் FB அறிவிக்கும்

Gavitha   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது இணையத்தளத்தில் காணப்படும் சமூக வலையமைப்புக்களின் முகநூல் முக்கிய பங்கு வகிப்பதாக அமைந்தாலும் இந்த முகநூல் மூலம் பலருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. முகநூல் மூலம் தங்களது மானத்தை இழந்தவர்கள்அநேகம்.

தனிப்பட்ட பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, அரசோ அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ உங்களது முகநூல் பக்கத்தை உளவு பார்ப்பதாக தெரிந்தார், அது தொடர்பாக முகநூல் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் என்று முகநூலின் தலைமை பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டேமோஸ் தெரிவித்துள்ளார்.

அரசு சார்ந்த அமைப்புகள், தனிநபரின் முகநூல் பக்கத்தில் நுழைய முற்படும்போது, பயனாளரின் தனியுரிமையை பாதுகாக்கும் நோக்கில் முகநூல் நிறுவனம் தனது பாதுகாப்பு நடவடிக்கையை மேம்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில், பயனாளர் அல்லாத அரசாங்க நிறுவனங்கள் முகநூல் பக்கத்துக்குள் நுழைய முற்பட்டால் அந்த தகவலை முகநூல் பயனாளருக்கு தருவது மட்டுமின்றி, அவரது அலைபேசிக்கு அனுப்பும் பிரத்தியேகமான குறிப்புகளை மட்டுமே பயன்படுத்தி முகநூலை உபயோகிக்க இயலும்படி செய்துள்ளதாகவும் முகநூலின்  தலைமை பாதுகாப்பு அதிகாரி  அறிவித்துள்ளார்.

இதன் மூலம் பயனாளரின் தனியுரிமை மேலும் பாதுகாக்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X