2024 மே 24, வெள்ளிக்கிழமை

ஊழியர்கள் தொடர் பணி நீக்கம் கூகுளின் அதிரடி!

Freelancer   / 2024 மே 03 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொரோனா காலம் வந்தது முதல், தொடர்ந்து ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை திடீர் திடீரென பணிநீக்கம் செய்து வருகின்றன.

இதில் இந்த வருட ஆரம்பித்தின் சில வாரங்களிலேலே 46 ஐடி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றிய 7,500க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியது. அந்த 46 நிறுவனங்களில், கூகுள் நிறுவனமும் ஒன்று.

கூகுள், தன் பங்கிற்கு நூற்றுக்கணக்கான ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது.
இந்நிலையில் கடந்த வாரம் கூகுள் நிறுவனம் மேலும் 200 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

கடந்தவாரம் ‘முதல் காலாண்டு வருவாய் அறிக்கை’யை சமர்பித்த கூகுள் நிறுவனம், இந்த வாரம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. S

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .