Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேடுதல் தொடர்பான விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கூகிளுடன் இம்மாதம் மூன்று வருட ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளதாக யாகூ செவ்வாய்க்கிழமை (20) தெரிவித்துள்ளது. சந்தை எதிர்பார்ப்பை விட குறைந்தளவு இலாபத்தையே பெற்றுள்ளதாக அறிவித்துள்ள யாகூவை தூக்கி நிலை நிறுத்த அதன் தலைவரும், பிரதம நிறைவேற்றதிகாரியுமான மரிசா மேயர் மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாகவே இது பார்க்கப்படுகிறது.
தற்போது யாகூ நிறுவனமானது மைக்ரோசொப்ட் நிறுவனத்துடன் கொண்டுள்ள இணைப்பின் அடிப்படையில் யாகூவானது தனது இணையத்தளங்களில் காணப்படும் விளம்பரங்களின் மூலமாக குறிப்பிட்ட ஒரு தொகை இலாபத்தை பெறுவதற்கு மேலதிகமாகவே மேற்படி கூகிளுடனான ஒப்பந்தம் அமையவுள்ளது.
கூகிள் மற்றும் பேஸ்புக்கிடம் இருந்து எதிர்கொள்ளும் கடும் போட்டி காரணமாக விளம்பர விற்பனை மூலமாக பெறும் வருமானத்தைப் பெறுவதில் யாகூ திணறி வந்துள்ளநிலையில். யாகூவின் மூன்றாவது காலாண்டு முடிவில் வெளிவந்த அறிக்கையில் கூகிளுடனான ஒப்பந்தம் முன்னேற்றகரமானதொன்றாக காணப்படுகிறது.
நான்காவது காலாண்டுப் பகுதியில் 1.16 பில்லியன் அமெரிக்க டொலர் தொடக்கம் 1.20 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானதாக எதிர்பார்ப்பதாக யாகூ தெரிவித்துள்ளபோதும், ஆய்வாளர்களின் சராசரி எதிர்பார்ப்பான 1.33 பில்லியன் அமெரிக்க டொலரை விட இது குறைவானதே ஆகும்.
35 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago