Shanmugan Murugavel / 2015 நவம்பர் 05 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ட்ரோன் மூலமான தனது விநியோக சேவையின் அறிமுகம் தொடர்பான தகவல்களை தேடல் இயந்திர ஜாம்பவானான கூகிளானது அறிவித்துள்ளது.
இந்தத் திட்டமானது Wing என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் நுகர்வோருக்கான பொருட்களை, ரோபோ வானூர்தி மூலம் 2017ஆம் ஆண்டில் விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை, விநியோக சேவை திட்டத்தின் தலைவரான டேவிட் வொஸ் விடுத்திருந்தார்.
தற்போது, ஏனைய இணையத்தள விற்பனை நிறுவனங்களான அமெஸோன், அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்கள், ட்ரோன் விநியோக சேவை தொடர்பாக சோதனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2017ஆம் ஆண்டில் வர்த்தக செயற்பாடுகளை மேற்கொள்வதே தமது இலக்கு என வொஷிங்டனில் இடம்பெற்ற விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மாநாடு ஒன்றில் உரையாற்றும்போது வொஸ் தெரிவித்திருந்தார்.
எனினும் எந்தவகையான ட்ரோன்களை கூகிள் பயன்படுத்தும் என்றோ, எந்த வகையான பொருட்களை ட்ரோன்கள் மூலம் விநியோகிக்கப்படுமென்றோ என்ற தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்த Wing திட்டமானது 2014ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், ஆரம்பத்தில் இது கூகிளின் இரகசிய ஆராய்ச்சி மையமான கூகிள் எக்ஸ் இல் இருந்ததோடு, தற்போது இது, கூகிளின் பிரதான நிறுவனமான Alphabet இன் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னர் தனது சொந்த ட்ரோன்களின் சோதனைப் பறப்பை அவுஸ்திரேலியாவில் கூகிள் மேற்கொண்டிருந்ததுடன், இந்த ட்ரோன்கள், பேரழிவு நிவாரண உதவிகளையோ அல்லது உடனடித் தேவையான மருந்துகளையே விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
6 minute ago
10 minute ago
14 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
14 minute ago
37 minute ago