2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சிறுவர் கண்காணிப்பு செயலி மீளப்பெறப்பட்டது

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 02 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களின் இணையத்தள செயற்பாடுகளை கண்காணிக்கும், தென்கொரியாவின் பிரபலமான செயலியான Smart Sheriff மீளப் பெறப்பட்டுள்ளது.

Google Play storeஇலிருந்து இந்த செயலியை அகற்றியுள்ள கொரியா தொடர்பாடல் ஆணைக்குழு, இதனைப் பயன்படுத்தும் பயனர்களை வேறு வழிகளை நாடுமாறு கோரியுள்ளது.

அனைத்து சிறுவர்களின் அலைபேசிகளும் கட்டாயமாக கண்காணிக்கப்பட வேண்டும் என தென்கொரியா கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தது.

மேற்படி செயலியில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றிய அறிக்கை வெளியாவதற்கு முன்னரே இந்த செயலியை அகற்றுவதுக்கான முடிவு எடுக்கப்பட்டதாக கொரியா தொடர்பாடல் ஆணைக்குழு கூறியுள்ளது. தவிர, ஏராளமான இலவச செயலிகள் தற்போது கிடைப்பதன் காரணமாகவே தடை செய்யப்படும் முடிவு எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செயலியானது Moiba நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதோடு, தென்கொரியாவில் பல்லாயிரக்கணக்கானோரால் தரவிறக்கப்பட்டிருந்தது. எனினும், டொரன்டோ பல்கலைக்கழகம், Cure53 நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி இந்தச் செயலியானது பேரழிவுகளைத் தரக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெளியிடப்பட்ட அறிக்கைகளில் சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், பிள்ளைகளின் பெற்றோருக்கான வடிகட்டல்கள் இலகுவாக நிறுத்தக் கூடிய வகையில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எனினும் அறிக்கைகள் வெளியாக முதல் இந்த பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டிருந்ததாக Moiba நிறுவனம் தெரிவித்திருந்தது.    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .