Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 29 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்போதுள்ள செவ்வாய்க் கிரகத்தில், பாயும் இயல்புடைய தண்ணீர் இருப்பதற்கான பலமான ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாக, நாசா அறிவித்துள்ளது.
செவ்வாய் தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள எம்.ஆர்.ஓ என்றழைக்கப்படும் Mars Reconnaissance Orbiter இனால் வழங்கப்பட்டுள்ள ஆதாரங்களின் அடிப்படையிலேயே, இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தண்ணீர் தொடர்ச்சியாகப் பாய்வதால் ஏற்படும் நீளமான வரிபோன்ற அமைப்பு, செவ்வாயில் காணப்படுவதைப் புகைப்படங்கள் மூலம் வெளியிட்ட நாசா, அவை சில நூறு மீற்றர்கள் நீளமாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இந்தக் கோடுகள், அங்கு பாயும் உப்புத்தன்மையான நீரினால் ஏற்படுத்தப்படுவது என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
இதன்படி, செவ்வாயில் உயிர் இருப்பதற்கான வாய்ப்புகளையும் இது கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
'திரவ நிலையிலுள்ள தண்ணீர் காணப்படுவது - அது மிகவும் உப்புத்தன்மையான தண்ணீராக இருந்தாலும் கூட - அங்கு உயிர்வாழ்க்கை காணப்பட்டால், அது எவ்வாறு உயிர்வாழும் என்பதை விளக்குவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது" என, நாசாவின் விஞ்ஞானச் செயற்பாடுகளுக்கான இணை தண்ணீர்வாகியான ஜோன் க்ரன்ஸ்பெல்ட் தெரிவித்தார்.
செவ்வாயில் தண்ணீர் இருப்பதற்கான சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்தாலும், அது குறித்த ஓரளவு உறுதியான ஆதாரங்களைக் கொண்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல், இம்முறையே முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
லூஜேந்திரா ஓஜா தலைமையிலான குழுவொன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்த ஓஜா, 'செவ்வாயில் தண்ணீர் இருப்பதாகக் கதைக்கும் போது, முன்னர் இருந்த தண்ணீர் பற்றியோ அல்லது உறைந்த தண்ணீர் பற்றியோ தான் கதைப்பார்கள். ஆனால், அதை விட அதிகமான விடயம் அதிலிருப்பதை நாம் தற்போது அறிவோம்" எனக் குறிப்பிட்டார்.
கடந்த 2006ஆம் ஆண்டு முதல் செவ்வாயில் காணப்படும் எம்.ஆர்.ஓ, ஆறு விஞ்ஞானக் கருவிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
2 hours ago
3 hours ago