2026 மே 12, செவ்வாய்க்கிழமை

dd

சாம்சங் நிறுவனத்திடம் 15 மில்லியன் டாலர் இழப்பீடு கேட்டு:டுவா லிப்பா வழக்கு

Editorial   / 2026 மே 12 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பிரிட்டிஷ் பாப் இசை நட்சத்திரமான டுவா லிப்பா (Dua Lipa), தனது அனுமதியின்றி நிழற்படத்தைப் பயன்படுத்தியதற்காக சாம்சங் (Samsung) நிறுவனம் 15 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

சாம்சங் நிறுவனம் தயாரிக்கும் சில வகை தொலைக்காட்சிகளின் அட்டைப் பெட்டிகளில், டுவா லிப்பாவின் அனுமதியின்றி அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் இது குறித்து அறிந்த பாடகி, தனது புகைப்படத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு சாம்சங் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இருப்பினும், சாம்சங் நிறுவனம் அந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை என்று டுவா லிப்பாவின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆதாரங்கள் சமர்ப்பிப்பு: சமூக ஊடகங்களில் இணையவாசிகள் அந்த அட்டைப் பெட்டிகளின் படங்களைப் பகிர்ந்துள்ளதைக் குறிப்பிட்ட வழக்கறிஞர்கள், அவற்றைச் சான்றுகளாகவும் சமர்ப்பித்துள்ளனர். மேலும், டுவா லிப்பாவின் புகைப்படம் அட்டைப் பெட்டியில் இருந்த காரணத்தினாலேயே சிலர் அந்தத் தொலைக்காட்சிகளை வாங்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறித்த நிழற்படம் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது எடுக்கப்பட்டது என்றும், அதனைப் பயன்படுத்துவதற்கான முழுமையான சட்டபூர்வ உரிமை டுவா லிப்பாவுக்கு மட்டுமே உள்ளது என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .