2026 மே 12, செவ்வாய்க்கிழமை

தெனியாயவில் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

Editorial   / 2026 மே 12 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், நாளை (மே 13) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தென் மாகாண கல்விச் செயலாளர் நிஷான் பத்திரண தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, பாடசாலை வளாகங்களைத் துப்புரவு செய்யவும், சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்கவும் நேற்றும் (11), இன்றும் (12) தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்:

முன்பள்ளிகள்: தற்போது விடுமுறை வழங்கப்பட்டுள்ள முன்பள்ளிகள் இந்த வாரம் முழுவதும் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்.

தூய்மைப்பணி: பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக முன்னெடுக்கப்படும் தூய்மைப்படுத்தல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பங்களிக்க விரும்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள், தெனியாய வலயக் கல்வி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .