2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

டுவிற் ஒழுங்கில் டுவிற்றர் பரிசோதனை

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவிற்றரை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் டுவிற்றர் கணக்கில் டுவிற் ஒழுங்கானது மாற்றமடைந்திருப்பதை நீங்கள் கடந்த சில நாட்களில் அவதானித்திருக்கலாம். ஆம், டுவிற் ஒழுங்கு தொடர்பாக தாம் பரிசோனையில் ஈடுபட்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை (08) டுவிற்றர் உறுதிப்படுத்தியுள்ளது.

மைக்ரோ புளோக்கிங் தளமான டுவிற்றரில், சாதாரணமாக டுவிற் செய்யப்படும் ஒழுங்கிலேயே, புதிய டுவிற்கள் முன்னுக்கும் பழைய டுவிற்கள் பின்னுக்கும் காணப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, ஒவ்வொரு பயனர்களுக்கும் அவர்களுக்கு முக்கியமானதெனக் கருதும் டுவிற்களை அவர்களின் டுவிற்றர் கணக்கில் முன்னுக்கு தெரியும் வகையான பரிசோதனையே டுவிற்றர் மேற்கொண்டுள்ளது.

டுவிற்றரின் பயனர் கணக்கு அதிகரிப்பு எண்ணிக்கையானது மெதுவாகவே இருந்திருக்கின்ற நிலையிலேயே, டுவிற்றரின் புதிய பிரதம நிறைவேற்றதிகாரியாகப் பொறுப்பேற்ற ஜக் டோர்சியே மேற்படி பரிசோதனையை மேற்கொண்டுள்ளார்.

எனினும் 320 மில்லியன் டுவிற்றர் கணக்குகளைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோனோர் மேற்படி டுவிற்றர் ஒழுங்கு மாற்றத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். தாங்கள், புதிய விடயங்களை காணுவதற்காகவே டுவிற்றருக்கு வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே டுவிற்றர் கணக்கில் ஒருவர் செயற்பாட்டு நிலையில் இல்லாதபோது, குறிப்பிட்ட டுவிற்றர் கணக்கு தொடர்பாக என்ன விடயங்கள் இடம்பெற்றன என்பதை, குறிப்பிட்ட நபர் மீண்டும் டுவிற்றருக்கு வரும்போது காட்டும் வசதி டுவிற்றரில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மேற்படி, உங்களுக்கு முக்கியமான விடயங்களை உங்களுக்கு காட்டும் வசதியினை பேஸ்புக்கானது 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியிருந்தது.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X