Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூகிளானது தனது இரண்டாவது OnHub router ஐ கடந்த செவ்வாய்க்கிழமை (27) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தயாரிப்பு Asus நிறுவனத்தின் கூட்டிணைப்பிலேயே உருவாகியுள்ளது.
கூகிளானது தனது முதலாவது OnHub router தொடரை கடந்த ஓகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியிருந்தது.
இதையடுத்து router ஐ இலகுவாக பயன்படுத்தும் முகமாகவும், தற்போது மக்கள் பயன்படுத்துவதை விட மேம்படுத்தப்பட்ட Wi-Fi சமிக்ஞையை வழங்கும் முகமாக தனது இரண்டாவது தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த router இன் மீது நீங்கள் கையசைப்பதினூடாக குறிப்பிட்டதொரு சாதனத்துக்கு மட்டும் முதன்மைப்படுத்தி Wi-Fi சமிக்ஞை கிடைக்கக் கூடிய வசதியையும் கொண்டமைந்துள்ளது சிறப்பம்சமாக உள்ளது.
தவிர, சாதனங்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, இருக்கக்கூடிய சிறந்த அன்டெனாக்களை தெரிவு செய்து Wi-Fi சமிக்ஞையை அனுப்பும் வசதியையும் புதிய OnHub router கொண்டமைந்துள்ளது. இந்த வசதி அறிமுக TP-Link இனால் தயாரிக்கப்பட்ட OnHub router இலும் காணப்பட்டபோதிலும், அதன் மேம்படுத்தலாக புதிய OnHub router இல் காணப்படுகிறது.
புதிய OnHub router இற்கான முற்பதிவுகளை கடந்த செவ்வாய்க்கிழமை (27) முதல் அதன் இணையத்தளத்தில் மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. இதன் விலை 219.99 அமெரிக்க டொலர்களாகும்.
முதலாவது OnHub router ஐ போன்று இந்தப் புதிய OnHub router உம் மூடிய இடங்களுக்குள் வைக்கப்படுவதாக இல்லாமல் திறந்த வெளியில் வைக்கப்படுவது போன்று வடிவமைக்கப்படுள்ளது. இதன்படி, வீட்டின் நடுவிலுள்ள மேசையில் நீங்கள் OnHub router ஐ வைக்கும்போது உறுதியான சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ளமுடியும். இந்தப் புதிய OnHub router இன் வடிவத்தினை குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியாமல் இருந்தாலும், சாதாரண router போலல்லாது வித்தியாசமாகவே உள்ளது.
புதிய OnHub router உம் முழுமையாக Google On செயலினாலேயே கட்டுப்படுத்தப்படவுள்ளது.
3 minute ago
7 minute ago
11 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
7 minute ago
11 minute ago
15 minute ago