Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 28 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக வலைத்தள உலகின் ஜாம்பவானாகத் திகழும் பேஸ்புக், தனது மிகக் குறைந்த பயன்பாட்டிலுள்ள சேவையான Other Inbox சேவையை நிறுத்தப் போவதாக தீர்மானித்துள்ளது.
உங்களுடன் பேஸ்புக்கில் நண்பர்களாக இல்லாதவர்கள் அனுப்பும் செய்திகளே இந்த Other Inbox இல் காணப்பட்டுவந்தன. இந்தச் சேவையை சராசரி பேஸ்புக் பாவனையாளர்கள் பார்வையிடுவதில்லை. மிகக் குறைவானோரினாலே இந்தச் சேவை பயன்படுத்தப்பட்டு வந்தது.
இதனையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை (27) முதல் இந்தச் சேவையை Message Requests என்ற சேவை மூலம் பேஸ்புக் பிரதீயீடு செய்கின்றது. இந்தப் புதிய சேவையின் மூலம், உங்களை யாராவது தொடர்பு கொள்ள விரும்பினால் உங்களது பெயர் இருந்தால் போதும் அவர் உங்களைத் தொடர்பு கொள்ளலாம். ஆனால், குறிப்பிட்ட நபர் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமா என்பதை நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.
இதன் மூலம், உங்களுடைய அலைபேசி இலக்கத்தை கொண்டிராத, உங்களின் நண்பர் இல்லாதவர்களின் செய்திகள், அலைபேசியில் உள்ள Messenger செயலியிலோ அல்லது பேஸ்புக் இணையத்தில் உள்ள Messages இலிலோ மேலே காணப்படும் Message Requests tabஇலோ காணப்படும்.
இந்தப் பகுதியில் இருக்கும் செய்தியில் அனுப்பியவரின் நகரம், வேலை, உங்களுக்கும் அவருக்கும் இடையே பொதுவாக உள்ள நண்பர்கள் என சில பொதுத் தகவல்கள் உங்களுக்கு காட்டப்படும். எனினும் நீங்கள் குறிப்பிட்ட செய்தியை பார்வையிட்டது அனுப்பியவருக்கு காண்பிக்கப்படமாட்டாது.
34 minute ago
43 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
50 minute ago