2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

பணிக்குறைப்பு செய்யும் டுவிட்டர்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வாழ்நாளில் இரண்டாவது தடவையாக டுவிட்டரின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்றுள்ள டுவிட்டரின் இணை நிறுவுநர் ஜக் டோர்சி, டுவிட்டரின் பயனர்முகத்தை அதிகரிக்கும் முகமாக, அதன் பணியாளர் படையின் 8 சதவீதத்தை அல்லது 336 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது.

இந்தப் பணிக்குறைப்புக்கள் பிரதானமாக, டுவிட்டரின் இயந்திரவியற்பகுதியிலும், தயாரிப்பு பகுதிகளிலுமே மேற்கொள்ளப்படவிருக்கின்றது. கடந்த ஜூன் 30ஆம் திகதி வரை டுவிட்டரில் உலகளாவிய ரீதியில் 4,100 பணியாளர்கள் இருந்திருந்தனர்.

சிறிய அணியுடன் இயந்திரவியற்பகுதி விரைவாக முன்னேறமுடியும் என்று தாங்கள் உறுதியாக நம்புவதாகவும், எனினும் பணியாட் தொகுதியில், இயந்திரவியற்பகுதியே தொடர்ந்து பெரும்பாகத்தை கொண்டிருக்கும் எனவும், இதற்கு சமாந்தரமாக நிறுவனத்தின் மற்றைய பிரிவுகள் நெறிப்படுத்தப்படும் என ஜக் டோர்சி தெரிவித்துள்ளார்.

ஜக் டோர்சி, டுவிட்டரின் இடைக்கால பிரதம நிறைவேற்றதிகாரியாக பதவியேற்ற பின்பு, “buy now” என்ற பொத்தானை டுவிட்டர் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் மூலம் பயனர்கள் கொள்முதல்களை மேற்கொள்ள முடியும்.

கடந்த ஜூலையில் டிக் கொஸ்டோலோ பிரதம நிறைவேற்றதிகாரி பதவியிலிருந்து விலகிய பின் இடைக்கால பிரதம நிறைவேற்றதிகாரியாக ஜக் டோர்சி பதவியேற்று, கடந்த வாரம் நிரந்தரமாக பிரதம நிறைவேற்றதிகாரியாயிருந்தார்.

இந்தப் பதவி விலத்தல்களுக்காக 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவாகும் என்றும், மீள் கட்டமைப்பு பணிகளுக்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என டுவிட்டர் எதிர்பார்த்துள்ளது. எனினும், அதிகமான இந்த மறு சீரமைப்பு பணிகள் நான்காவது காலாண்டுப் பகுதியிலேயே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்றாவது காலாண்டுப் பகுதிக்கான வருமானம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வெளியாகவுள்ளநிலையில், அது 545 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் 560 அமெரிக்க டொலர்களுக்கும் இடையே இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

மேற்படி அறிவிப்பு வெளியாகியவுடன், கடந்த செவ்வாய்க்கிழமை, டுவிட்டரின் பங்குகள் 6.7 சதவீதம் அதிகரித்து பங்கொன்றின் விலை 30.68 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .