Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இயேசு உயிர்த்த ஞாயிறு திருநாள் வைபவம் நேற்று(27) நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா, மறைமாவட்ட குரு முதல்வரும் புளியந்தீவு மரியாள் இணைப்பேராலயத்தின் பங்குத்தந்தையுமான ஏ.தேவதாஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறு திருநாள் திருப்பலி ஆராதனையை மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா நடத்தி வைத்தார்.
இந்த வைபவத்தில் கருத்து தெரிவித்த, மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா,
அன்பு சமாதானம் மகிழ்ச்சி இவைகள் இயேசு உயிர்ப்பின் மூலம் இயேசு விட்டுச் சென்றுள்ளார். இதனை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.
இயேசு காட்டித்தந்த வழி முறைகளை பின் பற்ற வேண்டும். நம்மீது இறைவன் இரக்கமாக இருக்கின்றான் என்றார்.


3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago