2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கொட்டாஞ்சேனையில் ஸ்ரீராமநவமி விழா

Editorial   / 2025 ஏப்ரல் 04 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொட்டாஞ்சேனை     ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில ஸ்ரீராமநவமி விழா பக்திபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை (06) கொண்டாடபடப்படுகிறது.

 ஸ்ரீ ராம நவமி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அவதாரங்களில் ஒன்றான ஸ்ரீராமர் அவதரித்த புனிதமான நாள் ஆகும். 

ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்குமுள்ள பக்தர்களால் ஸ்ரீ ராம நவமி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் நாள் முழுவதும் விரதமிருந்து,  ஸ்ரீ ராமபிரானை அவரின் புனித நாமங்களை உச்சரிப்பதன் மூலம் அல்லது இராமாயணத்தைக் கேட்பதன் மூலம் ஸ்ரீ ராம நவமியை பக்திபூர்வமாக அனுஷ்டிக்கின்றனர்.

கொட்டாஞ்சேனை   ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஸ்ரீ ராம நவமி விழாவும் ஒன்று.

அந்த வகையில் அன்றையதினம் மேற்படி   ஆலயத்தில், வெள்ளிக்கிழமை (04)  மாலை 4.00 மணி முதல் விஷேட பூஜை, வழிபாடு, கீர்த்தனை, பிரசங்கம்  என்பனவும் இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கல் என்பனவும் இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .