2025 ஜூலை 19, சனிக்கிழமை

நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை

Editorial   / 2025 ஜனவரி 13 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் முல்லைத்தீவு - பழைய செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த தைத்திருநாளை முன்னிட்டு இடம்பெறும் விசேட பூஜை வழிபாடுகள் திங்கட்கிழமை( 13) மிகச் சிறப்பாக இடம்பெற்றன.

இந் நிலையில் நீராவியடி பிள்ளையாருக்கு விசேட அபிஷேக பூஜைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பிள்ளையாருக்கு குழை சோறு படையலிட்டு மிகச் சிறப்பாக வழிபாடுகள் இடம்பெற்றன.

மேலும் இந்த வழிபாடுகளில் செம்மலை மற்றும், செம்மலை கிழக்கு கிராம மக்கள், அடியவர்கள்,   வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
 எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த காலங்களில் குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் முயற்சிகளை மேற்கொண்டதுடன், இவ்வாலயத்தில் தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தனர். 

இந் நிலையில் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோரின் தொடர் போராட்டத்தினால், நீதிமன்ற உத்தரவிற்கமைய தற்போது தமிழ் மக்கள் இவ்வாலயத்தில் சுமூகமாக வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விஜயரத்தினம் சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X