Princiya Dixci / 2016 நவம்பர் 19 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த 1,008 ஸஹஸ்ர சங்காபிஷேகமும், பாற்குட பவனியும், இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது.
வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூசையைத் தொடர்ந்து, பெண்கள் தலையில் பாற்குடமேந்தி வாழைச்சேனை கல்குடா வீதி, பேத்தாழை பாடசாலை வீதி, முருகன் கோயில் வீதி, புதுக்குடியிருப்பு கோராவெளி வீதி, புதுக்குடியிருப்பு வீதி வழியாக ஆலயத்தைச் சென்றடைந்தது.
ஆலயத்தைச் சென்றடைந்து அம்பாளுக்கு பக்த அடியார்களால் தலையில் ஏந்தி கொண்டுவரப்பட்ட பாலைக்கொண்டு பாலாபிஷேகம் நடைபெற்றதுடன், பின்னர் சங்காபிஷேகப் பூசைகள் நடைபெற்றன.
இதன்போது நூற்றுக்கணக்கான பெண்கள், மழைக்கு மத்தியில் பால்குடமேந்தி தங்களுடைய நேர்த்தியை நிறைவேற்றிக் கொண்டனர்.
இப்பூசைகள் யாவும் வேதாகம சிவாகம குருமணி கிரியாகால ஞானஜோதி சிவஸ்ரீ.கருணாகர மகேஸ்வரக் குருக்கள் மற்றும் ஆலய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.
25 minute ago
27 minute ago
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
42 minute ago
2 hours ago