Freelancer / 2023 ஏப்ரல் 11 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் திருமஞ்ச திருவிழா இன்று மிகவும் பக்தி பூரவமாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்று விநயாக பெருமான் உள் வீதி எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் விநாயக பெருமான் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றைய திருமஞ்ச உற்சவத்தில் ஈழத்தின் புகழ் பூத்த நாதஸ்வர தவில் கலைஞர்களின் விசேட கச்சேரியும் இடம்பெற்றது.




அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .