2025 ஜூலை 19, சனிக்கிழமை

சனிக்கிழமை கீதாஜெயந்தி

Editorial   / 2022 டிசெம்பர் 01 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலயத்தில்  டிசெம்பர் 3ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு கீதா ஜெயந்தி தினம்; கொண்டாடப்படுகிறது.

வௌ்ளிக்கிழமையன்று, ஆலயத்தில்  பகவத்கீதை உண்மையுருவில்  நூலில் உள்ள 700 சுலோகங்களும் பாராயணம் செய்யப்படும்.

பகவத் கீதையை இதுவரை காலமும் வாசிக்க தவறியவர்கள்  அதனை  வாங்கி வாசிக்க ஆரம்பிப்பதற்கும்,  தம் அன்புக்குரியவர்களுக்கு கீதையை அன்பளிப்பாக வழங்குவதற்கும் உகந்த நாளாக கீதா ஜெயந்தி தினம்; திகழ்கிறது.

5000  வருடங்களுக்கு முன்னர் அதாவது துவாப்ர யுகத்தில் குருக்ஷேத்திர யுத்தத்தின் போது அர்ஜுனனின் மனக்கலக்கத்தைப் போக்கி  அர்ஜுனன் மூலமாக உலக  மக்களுக்காக பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையை போதித்தார்.

அன்றைய தினம் முதல் வருடாந்தம் உலகெங்குமுள்ள  பக்தர்களால் கொண்டாடப்பட்டு வரும் கீதா ஜெயந்தி தினம் 5159 ஆவது வருடமாக இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது..

அனைவரும் இந்த கீதா ஜெயந்தி நிகழ்வில் கலந்து கொண்டு பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் அருளை பெற்றுக் கொள்ளுமாறு கிருஷ்ண பக்தி கழகம் வேண்டுகோள் விடுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X