2023 ஜூன் 10, சனிக்கிழமை

துர்க்கா பூஜை

Editorial   / 2022 செப்டெம்பர் 28 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில்    காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழாவின்

இரண்டாவது நாள் நிகழ்வு பணிமன்றதலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நேற்று முன்தினம் (27) மாலை இடம்பெற்றது.

நிகழ்வுகளாக பஜனை, ஒங்காரம்,பஜனை,அஸ்ரோத்திரம்,பூசை இடம்பெற்றது.

பாலையடி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகளாக பேச்சு, கதாப்பிரசங்கம், பரதநாட்டியம், சிறப்பு சொற்பொழிவுகளும் சுவாமி விபுலாநந்தர் கற்கைகள் நிறுவகத்தின் மாணவிகளின் பரதநாட்டியம்   என்பன இடம்பெற்றது.

பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இந்நிகழ்வில்  இந்து கலாசார உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகள்,  இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  அ.உமாமகேஸ்வரனின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

ஏற்பாடுகளை மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி  உத்தியோகத்தர் கு.ஜெயராஜி  மேற்கொண்டார். நிகழ்ச்சிகளை கலாசார உத்தியோகத்தர் என்.பிரதாப் தொகுத்து வழங்கினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .