2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம்

Freelancer   / 2022 ஜூன் 29 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்

ஈழத்தின் புராதன சிவ ஆலயங்களில் ஒன்றான ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய மகோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .

தொடர்ந்து ஆலயத்தின் சிறப்பு உற்சவங்களாக 10.07.2022ஆம் திகதி வேட்டைத் திருவிழாவும், 11.07.2022 ஆம் திகதி சப்பற திருவிழாவும்,  12.07.2022 தேர்த் திருவிழாவும், 13.07.2022 தீர்த்தத் திருவிழாவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

வடமாகாணத்தின் வன்னி பெருநிலப்பரப்பில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டானில் எழுந்தருளிய ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் மூல மூர்த்தி தானாக தோன்றிய சிறப்பினால்  தான்தோன்றீஸ்வரம் என அழைக்கப்படுகின்றது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .