Editorial / 2022 நவம்பர் 06 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு புனித மரியாள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நவம்பர் மாதம் 4 ஆம் திகதி கல்லூரி அதிபர் அருட்தந்தை ஹேமானந்த பெர்னாந்து தலைமையில் ஜுப்லி விழா சிறப்பாக நடைபெற்றது.
கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் இந்த நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டார்
நீர்கொழும்பு புனித மரியாள் தேவாலயத்தில் விசேட ஆராதனை இடம்பெற்றது. அதன் பின்னர் விசேட நினைவு முத்திரை வெளியிடப்பட்டது. நினைவு முத்திரை அட்டை கர்தினாலுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
கல்லூரியின் முன்னாள் மாணவரான மறைந்த கலாநிதி நிக்கலஸ் மார்கஸ் பெர்னாண்டோவின் பெயரில் நிர்மாணிக்கப்படவுள்ள ஜூபிலி கட்டிடத்தின் அடிக்கல்லையும் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் நட்டினார்.
அதிபர் தந்தை ஹேமந்த பெர்னாந்துவின் வழிகாட்டலின் கீழ் பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர் குழாம் ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். (எம் இசட். ஷாஜஹான்)




12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago