2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜோதிலிங்க தரிசனம்

Sudharshini   / 2015 மே 05 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

பாரதத்தின் பல்வேறு மாநிலங்களிலுள்ள மகிமை வாய்ந்த 12 சிவத்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 12 ஜோதிலிங்கங்கள் நுவரெலியா புனித திருத்துவ மத்திய கல்லூரியில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருந்தன.

இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வினை  கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் வைபவ ரீதியாக ஆரபித்து வைத்தார்.

சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்), மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீ சைலம் (ஆந்திரா), மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்), ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்),  வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்), பீமாநாதேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்), இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு),  நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்), விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்), திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்), கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்), குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்) ஆகிய சிவத்தலங்களிலிருந்து லிங்கங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமனி, இலங்கை பிரமகுமரிகள் இராஜயோக நிலையத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .