2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய சங்காபிஷேகம்

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய சங்காபிஷேக வைபவம் புதன்கிழமை (06) வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம் ஆகியவைகளின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்ற சங்காபிஷேக வைபவத்தின்போது,

திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து புறப்பட்ட பாற்குடப் பவணி நீண்ட தூரம் பயணம் செய்து விநாயகபுரம் ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்தை அடைந்ததும் அம்மனுக்கு சிவஸ்ரீ சண்முக மகேஷ்வர குருக்கள் தலைமையில் பாலாபிஷேகம் அடம் பெற்றதைத் தொடர்ந்து 1008 சங்குகளால் சங்காபிஷேகம் செய்யப்பட்டது.

நிகழ்வில் பிரதேநத்திலுள்ள ஆலயங்களின் பிரதம குருக்கள் உட்பட குருக்கள் மார்கள் மற்றும் ஏராளமான பெண் பக்தர்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .