2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பாற்குட பவனியும் சங்காபிஷேகமும்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருசா அபிஷேக இரண்டாவது வருட பூர்த்தியை முன்னிட்டு பாற்குட பவனியும் சங்காபிஷேகமும் இன்று (30) இடம்பெற்றது.

வாழைச்சேனை வைத்தியசாலை சித்தி விநாயர் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி, வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி, கிண்ணயடி வீதி, கறுவாக்கேணி வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.

தொடர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ புலேந்திரசர்மா குருக்கல் தலைமையில் பாலாபிஷேகமும் 1008 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேக பூசையும் இடம்பெற்றது.

சுங்காங்கேணி, கறுவாக்கேணி, கிண்ணயடி, கும்புறுரூமூலை, கொண்டயன்கேணி, மீறாவோடை போன்ற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .