2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் ஆலய திருக்கல்யாண பூசை

Princiya Dixci   / 2015 மே 31 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி கண்ணகியம்மன் அலயத்தின் வருடாந்த திருச்சடங்கின் 7ஆம் நாளாகிய இன்று ஞாயிற்றுக்கிழமை (31) திருக்கல்யாண பூசை நடைபெற்றது.

நேற்று சனிக்கிழமை (30) இரவு சுவாமி கிராம வீதி உலா வந்து கிராமத்தில் கன்னிக்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, கன்னிக்கால் மேள, தாள வாத்தியங்களுடன் ஆலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று திருக்கல்யாண பூஜை நடைபெற்றது.

கடந்த திங்கட்கிழமை (25) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான ஆலயத்தின் திருச்சடங்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை (02) நிறைவு பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .