2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாற்குட பவனி

Thipaan   / 2015 ஜூன் 01 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் தில்லையடி சிவ சுப்ரமணிய ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பாற்குட பவனி, பறவை காவடி மற்றும் காவடி என்பன திங்கட்கிழமை (01) காலை இடம்பெற்றன.

புத்தளம்- கொழும்பு வீதியில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்திலிருந்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக அடியார்கள் இதில் கலந்து கொண்டனர்.

தமது சமய கிரியைகளை நிறைவேற்றுவதற்காக அங்கிருந்தி புறப்பட்டு தில்லையடி சிவ சுப்ரமணிய ஆலயத்தை சென்றடைந்தனர்.

ஐயனார் ஆலய நிர்வாக சபையின் அனுசரணையோடு நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ வெங்கட சுந்தாராம குருக்கள் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகளும் கலந்து சிறப்பித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .