2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஆரோக்கிய அன்னை தேவாலயத் திருவிழா

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

அக்கரைப்பற்று புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் நிகழ்வும் திருநிலைப்படுத்தப்பட்ட திருகோணமலை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினை வரவேற்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலயத்தின் பங்குத்தந்தை அருட்திரு ஜி.அம்ரோஸ் தலைமையில் நடைபெற்ற இத்திருவிழாவில் கலந்து கொண்ட ஆலயத்தின் முன்னாள் பங்குத்தந்தையும் ஆயருமான பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகை கூட்டுத்திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்திய இசையோடு பெருந்திரளான தேவ அடியவர்களினால் வரவேற்கப்பட்ட ஆயர் முதன் நன்மை, உறுதிப்பூசுதல், திருவருட்சாதனம் வழங்கி வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகளை நடாத்தியதுடன் திருப்பலியையும் ஒப்புக் கொடுத்தார்.
 

நிகழ்வின் இறுதியில் தேவலாய செயலாளர் ஆர்.டிலோசன் பொருளாளர் பி.ஏ.கிறிஸ்டி உள்ளி;ட்டவர்களால் ஆயர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கொடியிறக்கத்துடன் நிறைவுற்ற இந்நிகழ்வில் பேரருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் தேவ அடியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X