Kogilavani / 2016 ஜூலை 05 , மு.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி எசல பெரஹராவுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் தியவடன நிலமே நிலங்க தேல தெரிவித்தார்.
கண்டி எசல பெரஹரா ஓகஸ்ட் மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகி 18ஆம் திகதி வரை நடைபெறும்.
முதலாவது கும்பல் பெரஹரா ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி வீதி வலம் வரும் என்றும் முதலாவது ரந்தோலி பெரஹரா ஓகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி வீதிவலம் வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி, எசல பெரஹரா நடைபெறுவதுடன், கெட்டம்பேயில் மறுநாள் 18ஆம் திகதியன்று, இடம்பெற உள்ள நீர்வெட்டு நிகழ்வின் பின்னர், அன்றைய தினம் இடம்பெறும் பகல் பெரஹராவுடன் இம்முறை எசல பெரஹரா முடிவுக்கு வரும்.
கண்டி, ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இம்முறை பெரஹராவை இனிதே நிறைவு செய்த செய்தியை, தியவடன நிலமே நிலங்க தேல சம்பிரதாய பூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவிப்பார்.
23 minute ago
46 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
46 minute ago
1 hours ago