Princiya Dixci / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
- எம்.றொசாந்த்
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம், இன்று வியாழக்கிழமை (07) காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 15 தினங்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன.
10ஆம் திருவிழாவான 16ஆம் திகதி மாலை திருமஞ்ச உற்சவமும், 11 ஆம் திருவிழாவான 17 ஆம் திகதி மாலை திருக்கைலாய உற்சவமும், 13 ஆம் திருவிழாவான 19 ஆம் திகதி மாலை சப்பர திருவிழாவும், 14 ஆம் திருவிழாவான தேர்த்திருவிழா 20 ஆம் திகதி காலையும், 15 ஆம் திருவிழாவான தீர்த்த திருவிழா 21 ஆம் திகதி காலை நடைபெறவுள்ளன. தீர்த்த திருவிழா அன்று மாலை கொடியிறக்கம் நடைபெறும்.
மகோற்சவ காலத்தில் காலை 8.15 மணிக்கு அபிஷேகமும், காலை 9 மணிக்கு பூஜையும், 9.30 மணிக்கு ஸ்தம்ப பூஜையும், 10 மணிக்கு வசந்த மண்டப பூஜையும் இடம்பெறும்.
மாலை திருவிழா மாலை 4.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி தொடர்ந்து 5.15 மணிக்கு பூஜையும், 5.45 மணிக்கு ஸ்தம்ப பூஜையும் மாலை 6.15 மணிக்கு வசந்தமண்டப பூஜையும் நடைபெறும்.
.jpg)
.jpg)
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago