Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Kogilavani / 2021 பெப்ரவரி 01 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை திஸ்பனை தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், எதிர்வரும் (3)ஆம் திகதி காலை 8.35 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு, இன்று திங்கட்கிழமை(1) காலை 8.30 மணிக்கு கருமாரம்பம், விநாயகர்; வழிபாடு, சிவாச்சாரிய வர்ணம், புண்ணியாகவாசனம், முகூர்த்த நிர்ணயனம் உள்ளிட்ட பூஜைகள் இடம்பெறவுள்ளன.
செவ்வாய்க்கிழமை (2) காலை 8.00 மணிக்கு புண்ணியாகவாசனம் என்பன இடம்பெறவுள்ளதுடன் மாலை 5.00 மணிக்கு எண்ணெய்க்காப்பு சாத்துதல் இடம்பெறவுள்ளது.
புதன்கிழமை (21) காலை 8.35 மணிமுதல் 10.39 மணிவரையுள்ள சுபமூகூர்த்தத்தில், மஹா கும்பாபிஷேகம் இடம்பெற்று தீபாரதனை, கோபூஜை, திருக்கதவு திறத்தல், தசர்ஷணம், ஆச்சாரிய சம்பாசணை, ஆசியுரை, கௌரவிப்பு, மஹாபிஷேகம், தீபாரதணை, மகேஸ்வர பூஜை என்பன இடம்பெற்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படவுள்ளது.
ஸ்ரீ செல்வவிநாயகர் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ. நா.முத்துகுமார குருக்களின் ஒருங்கமைப்பில், சுமார் 13 சிவாச்சாரியார்களின் பங்களிப்பில், கோவில் பரிபாலனசபை, தோட்டத் தலைவர்கள், தோட்ட மக்கள், தோட்ட உத்தியோகத்தர்கள், முத்தமிழ் இளைஞர் மன்றம் ஆகியோரின் ஏற்பாட்டில் கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெறவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago