Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வார இறுதியில், நாட்டின் உயரிய சபை அமைந்துள்ள தியவன்னாவில், அரசமைப்புப் பேரவை கூடியிருந்தது. அது முடிந்தவுடன், அனைவரும் கலைந்து சென்றனர்.
தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்கும் முன்னாள் பெரியவர், கூட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து புறப்பட்டு, எதிர்க்கட்சி லொபிக்குள் சென்றார். சென்றவர், அங்கும் இங்குமாக அங்கலாய்த்துக்கொண்டு இருக்கையில், அண்மைக் காலமாக, எதிர்க்கட்சி லொபிக்குள் செல்லாத ஒருவர், அந்தப் பக்கம் சென்றார்.
அவர் வேறு யாருமில்லை, இந்நாட்டின் இரண்டாவது தலைரும் யானைக் கூட்டத்தின் தலையுமே ஆவார். அவர் அங்கு சென்றது மாத்திரம் தான், முன்னாள் பெரியவரும் அவரும் சேர்ந்து, இரகசிய ஆலோசனையொன்றை நடத்திக்கொண்டு இருந்தனர்.
இரண்டு பக்கங்களையும் சேர்ந்த எம்.பிக்கள், அந்தப் பேச்சுவார்த்தையை உற்று நோக்கிக்கொண்டு இருந்த போதிலும், எவரும் அவ்விருவருக்கும் அருகில் போகவில்லை. எவ்வாறாயினும், அவர்கள் இருவரும், யாருக்கும் புரியாதளவுக்கு, தங்களுடைய ஆழ்ந்த ஆலோசனையை மேற்கொண்டிருந்தனர்.
பொதுத் தேர்தல், ஜனாதிபதிப் போட்டி, தேசிய அரசாங்கம்... இப்படி எதையோ பற்றி தான், அவர்கள் பேசியிருப்பார்கள் என்று, அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.
எவ்வாறாயினும், சுமார் 25 நிமிடங்கள் தொடர்ந்த இந்தப் பேச்சுவார்த்தை, தொடர்ந்தும் நீடிப்பதாக இருந்தாலும், முன்னாள் பெரியவர், நாவலப்பிட்டி பக்கம் நடைபெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொள்ள இருந்ததால், இரண்டாம் தலைவரிடம் விடைபெற்றுக்கொண்டு சென்றுவிட்டார்.
ஆனால், அவர்கள் என்ன தான் உண்மையில் பேசிக்கொண்டார்கள் என்பது, அவர்களைத் தவிர வேறெவரும் அறியார். எவ்வாறாயினும், அது மிக மிக முக்கியமானதொரு பேச்சுவார்த்தை என்பது மாத்திரம் உறுதி.
9 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
52 minute ago
2 hours ago
2 hours ago