2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

நவராத்திரியாக மாறிய தீபாவளி

Editorial   / 2017 செப்டெம்பர் 27 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீபாவளியை முன்னிட்டு, கொழும்பு நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் வைபவம் நேற்று (26) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டிருந்தார்.

பிரதமர் அங்கு சுமார் 12 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். இதன்போது தீபாவளி பண்டிகை பற்றியும் அஞ்ஞானம், மெஞ்ஞானம் பற்றியும் சிங்கள மொழியில் உரையாற்றினார். குறிப்பாக தீபாவளியையும் நாட்டின் சுபீட்சத்தை நோக்கிய பயணத்தின்போது அனைவரினதும் பங்களிப்பு குறித்து பல்வேறு கருத்துகளை அங்கு பகிர்ந்துகொண்டார்.

அவரது உரையின் பின்னர், அதனை மொழிபெயர்த்து தமிழில் கூறுவதற்கு பெண்மணியொருவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமரின் மிகக் கடினமான வார்த்தைப் பிரயோகங்களை உடனடியாக உரைபெயர்ப்பது கடினமானதுதான். ஆனாலும் தீபாவளியைப் பற்றி அவர் கூறிய கருத்துகளை இலகுவாக மொழிபெயர்க்கலாம்.

இருப்பினும், பிரதமரின் உரையை மொழி பெயர்த்த அந்தப் பெண்மணி, தீபாவளியை, நவராத்திரியாக மாற்றிவிட்டார். நவராத்திரியை முன்னிட்டுதான் நிதியுதவி வழங்கப்படுவதாக மொழிபெயர்த்தார்.

அங்கே சிங்களம் தெரிந்த தமிழர்கள் பலருக்கு ஆச்சரியம் மாத்திரமே மீதமிருந்தது.

ஏனென்றால், பிரதமர் எந்தவொரு இடத்திலும் நவராத்திரி என்ற வாரத்தையைப் பிரயோகிக்கவேயில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .