2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

தள்ளாடும் தலைவர்கள்

Editorial   / 2019 பெப்ரவரி 14 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சுங்கத்தில் நடந்த பிரச்சினைக்குச் சமாந்தரமான மேலுமிரு பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான தகவல், ஒன்றிணைந்த கூட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கிடைத்துள்ளது. சமுர்தியாக இருக்கும் நிறுவனமொன்றும் மதுவுக்கு வரிவிதிக்கும் நிறுவனமொன்றுக்குமே, இந்தப் புதிய பிரச்சினை வரவுள்ளதாகவும் இவ்விரு நிறுவனங்களுக்கும், தள்ளாடும் வயதிலுள்ளவர்களைத் தலைவராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சமுர்த்தியான நிறுவனத்துக்கு 73 வயதுத் தலைவரை நியமிக்கவுள்ளதாக, வயதுடன் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஓய்வுபெற்றவர்களை நிர்வாகத்துக்குள் உள்ளீர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, யூனியன் குழுவினர் தயாராக இருக்கின்றனராம். இதற்கு, ஒன்றிணைந்த கூட்டமும் ஒத்துழைப்பு வழங்குகிறதாம். அதனால், சுங்கச் சண்டையை விடப் பெரிய சண்டை காத்திருக்கிறது போலும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .