2022 ஜூலை 07, வியாழக்கிழமை

முன்னாள் தலைவர் குறித்த இரகசிய அறிக்கை

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் நிதி மோசடியில் ஈடுபட்டுவிட்டு, தற்போது வெளிநாட்டில் தங்கியுள்ள முன்னாள் தலைவர் தொடர்பில், அரசாங்கத்தின் உயர் இல்லமொன்றின் போது, இரகசிய அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை, புலனாய்வுப் பிரிவினர் தான் தயாரித்து உள்ளார்களென்றுத் தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்னமும் நாடு திரும்பாமல் மறைந்திருக்கும் இடங்கள் பற்றியும் அங்கு அவர் அன்றாடம் செய்யும் நடவடிக்கைகள் குறித்து, அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி முன்னாள் தலைவர், இதுவரை நாட்களும் தங்கியிருந்த நாட்டிலிருந்து, மலேசியா ஊடாக, சிங்கப்பூரை அடைந்துள்ளாரென்றும் யானைக் கூட்டத்தில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .