2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

கைகூடாத நல்லநேரம்

Menaka Mookandi   / 2018 டிசெம்பர் 13 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணியுடன் தொடர்புடைய அரசியல் தலைவரொருவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஜோஷியம் பார்க்கச் சென்றாராம்.

நாட்டின் முன்னாள் பெரியவருக்கு, நாட்டின் இரண்டாவது கதிரை கிடைத்த போதிலும், அதைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள ஏன் முடியவில்லை என்றுப் பார்த்துச் சொல்லுங்களென்று, ஜோதிடரிடம் அந்த அரசியல் தலைவர் கேட்டாராம்.

அதன்படி, கட்டங்களைக் குறித்துப் பார்த்த ஜோதிடர், அற்புதமான கதையொன்றைச் சொன்னாராம்.

முன்னாள் தலைவரின் நேரம் நல்லதாக இருக்கின்ற போதிலும், இரண்டாவது தலைமைக் கதிரையைப் பொறுப்பேற்ற நேரம் சரியில்லை என்றுக் கூறியுள்ளார்.

புதிய பிரதமர் பதவியேற்ற நேரம், நல்ல காரியங்கள் செய்யக்கூடிய நேரமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X