2023 ஜூன் 07, புதன்கிழமை

காதலை நிர்வாணமாக்கிய விசில் வானவேடிக்கை

Editorial   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

காதலை நிர்வாணமாக்கிய விசில் வானவேடிக்கை

நீண்டகாலமாக சகலராலும் அறியப்பட்ட பிரபல்யமான இரகசியம், “ விசில் வானவேடிக்கையால்” அம்பலமான சம்பவமொன்று கண்டிக்கு அண்மித்த பிரதேசமொன்றில், புது்தாண்டு தினத்தன்று இடம்பெற்றுள்ளது.

அவர், பரம்பரை வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், தன்னுடைய அதிகாரத்தை பிரதேசங்கமெங்கும் காண்பிக்கும் ஒருவராவார்.  அதேபோல, அவர், தன்னுடைய பலத்தை பயன்படுத்தி, பல பெண்களுடன் ​தொடர்பையும் பேணி வந்துள்ளார். அதில், மிக அண்மையில் தொடர்பை பேணிய விவகாரமும் இரகசியமானது அல்ல.

புத்தாண்டு பிறப்பையும் மறந்து, அந்தப் பயணத்தை மேற்கொள்வதற்கு அவர், மறக்கவில்லை. பரிசுகளையும் எடுத்துகொண்டு, தன்னுடைய கள்ளக் காதலியின் வீட்டுக்கு அவர் சென்றுள்ளார்.

புத்தாண்டு என்பதால், அப்பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள், இரவு வரையிலும் பல்வேறான புத்தாண்டு விளையாட்டுக்களை விளையாடிக்கொண்டிருந்தனர். அதனையும் கணக்கிலெடுக்காது, அந்த நபர், கள்ளக்காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.  

அவருக்கு கடுமையான பாடம் கற்பிக்கவேண்டுமென நினைத்த இளைஞர்கள், அப்பெண்ணின் வீட்டுக்கு அண்மையில், மறைந்திருந்து பெண்ணின் வீட்டை நோக்கி வானவேடிக்கைகளை ​விட்டுக்கொண்டிருந்தனர்.

எனினும், வான​வேடிக்கை, பட்டாசு, ஆகியவற்றுக்கு அந்நபர் பயப்பிடுவதாய் இல்லை, கள்ளக்காதலியின் வீட்டுக்குள் புகுந்தவர் திரும்பவே இல்லை.

எனினும், இரவும் கழிந்துகொண்டிருக்கின்றது. இன்னும் கொஞ்ச நேரம் காத்திருந்த இளைஞர்கள், “விசிலை அடித்துகொண்டு பறந்து வெடிக்கும் வான வேடிக்கையை” விடுவதற்கு ஆரம்பித்தனர்.

புதிய வகையில் விசில் அடித்தலும் பட்டாசு வெடித்தல் சத்தமும், வீட்டுக்குள் இருந்த ஜோடியின் காதுகளை கிழித்துள்ளன. எனினும், விசில் வான​​வேடிக்கையை வெடிப்பதை இளைஞர்கள் நிறுத்த​வே இல்லை.

எனினும், கோபமடைந்த அந்த நபர், கள்ளக்காதலியின் வீட்டிலிருந்து க​தவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, “யாரடா விசில் அடிப்பது” அதுவும் “பட்டாசு போட்டுக்கொண்டே யாரடா விசில் அடிப்பது” ஒன்று விசில் அடியுங்கள், அல்லது பட்டாசு போடுங்கள் என சத்தம்போட்டுள்ளார்.

இல்லையென்றால் நான் யார் என்பது தெரியும் தானே! அதனை காண்பித்துவிடுவேன் என மிரட்டிவிட்டு கள்ளக்காதலியின் வீட்டுக்குள்ளே சென்றுவிட்டார்.

அதனைக் கேட்டு கெக்கென சிரித்த இளைஞர்கள், “ மாமா, அதுதான், விசில் வானவேடிக்கை” எனக் கூறிவிட்டு, மீதமிருந்த விசில் வானவேடிக்கைகளையும் அவ்விடத்திலேயே பற்றவைத்துவிட்டு, காவல் காக்காமல் அங்கிருந்த சென்றுவிட்டனர்.

விசில் வானவேடிக்கையால் மூடப்பட்ட முன்கதவு விடியும் வரையிலும் திறக்கவில்லை என்றாலும் அவரது கள்ளக்காதல், விடியும் முன்னரே நிர்வாணமாகிவிட்டதாகவே அந்த ஊரில் கதையடிபடுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .