Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2022 ஜனவரி 02 , மு.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் ஆண்டி கார்ட்ரைட். இவர் கடந்தாண்டு அக்டோபரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் குளிர்தானப்பெட்டியில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டெடுத்து வழக்குப் பதிவு செய்தனர்.
முதற்கட்டமாக ஆண்டி கார்ட்ரைட்டின் மனைவி மெரினா கோகல் (37) என்பவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டி கார்ட்ரைட், நாடியா என்ற 25 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனைவி மெரினா கோகல் தனது தாயுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து முதலில் கணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி மெரினா கோகல் கணவனின் சடலத்துடன் உடலுறவு கொண்டதாகவும், கணவரின் உடலை பல துண்டுகளாக வெட்டி இரத்தம் குடித்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு துணையாக இருந்த மெரினாவின் தாய் எலெனாவையும் பொலிஸார் கைது செய்தனர்.
பின்னர் இருவரும் சிறையில் இருந்து வந்த நிலையில், ஜாமீன் கோரி மெரினா கோகல் மனு தாக்கல் செய்திருந்தார்.
அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மெரினா கணவனை கொலை செய்ததான சரியான ஆதாரங்கள் இல்லாததால், அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. இருப்பினும், அவர் இன்னும் விசாரணையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
28 minute ago
35 minute ago