2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

மான் தலைவரின் யோசனை!

Editorial   / 2017 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்ம நாட்டில பெண் ஜனாதிபதியோட வாரிசை அடுத்த தேர்தல்ல களமிறக்க முயற்சிகள் நடக்கின்றனவாம். பாரிய கொண்டாட்ட ஏற்பாடுகளோட மக்களை கவரும் முயற்சியில இப்போதிருந்தே இறங்கியிருக்காங்களாம்.

இதை கேள்விப்பட்ட மலையகத்தின் மான் தலைவர், தன்னோட வாரிசையும் அடுத்த தேர்தல்ல களமிறக்கனும் என்று முடிவுபண்ணி இருக்கிறார்.

அதற்காக இலண்டன் சென்று, அங்க சட்டப்படிப்பில் ஈடுபட்டிருக்கிற மகனோட பேசியிருக்கிறார் அவர். ஆனாலும் அங்கே ஒரு சிக்கல்.

அரசியல்ல ஈடுபட விருப்பம் இல்ல, வர்த்தகத் துறையிலேயே முதலீடு செய்து முன்னேறலாம் எனச் சொல்லியிருக்கிறார் அந்த வாரிசு.

தனக்குப் பிறகு கட்சியை கொண்டு செல்ல வாரிசு அரசியல்தான் செய்யணும் என்று விடாப்பிடியா தலைவர் சொல்லியிருக்கிறார். எனினும் அந்த வாரிசு கேட்கவேயில்லையாம்.

அதனால மனமுடைஞ்சு போயிருக்கிறாராம் மான் தலைவர். எப்படியாவது வாரிசை களமிறக்கியே ஆகனும் என்று யோசிக்கிறாராம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .