Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு வெவஸ்த வேனாமா? எனக் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். அது பேச்சில் மட்டுமல்ல செயலிலும் உண்டு.
நவராத்திரி பூஜைகள் வெகுவிமர்சியாக நடைபெறுகின்றன. பலரும் விரதமிருக்கின்றனர். காணிக்கைகளும் போடப்படுகின்றன.
“காணிக்கை”, இந்து மதத்துக்கு மட்டுமே உரித்தானது அல்ல. ஏனைய மதங்களிலும் காணிக்கை செலுத்தலாம். உண்டியல்களும் வைக்கப்பட்டிருக்கும். உண்டியலை அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் உள்ளனர். சில்லறைகளை கொடுத்தால், அப்படியே ஆட்டையைப் போட்டவர்களும் இல்லாமல் இல்லை.
இப்படிதான் தந்தையொருவர் சிறுசிறுக சேமித்து, ஊரிலுள்ள கோவில் உண்டியலில் போடுவதற்காக, தன்னுடைய மகளிடம் சில்லறைகளை கொடுத்தனுப்பியிருந்தார். கணக்கு கொஞ்சம் ஆயிரத்தை தாண்டியதால், சின்னமகளோ, அப்படியே சுருட்டிக்கொண்டாள்.
விவரமான தந்தை, 20 ரூபாய் தாள்களை சேமித்து, உண்டியலில் போடுவதற்காக தானே! எடுத்துசென்றுள்ளார்.
சும்மா அல்ல. அந்த நாணய தாள்களை நன்றாக கழுவி, ஐயன் பண்ணி, எடுத்துச் சென்றுள்ளார். ஏன்? டடா இப்படி செஞ்சிங்க எனக் கேட்டதற்கு,
“இல்ல மகள், அந்த நாணயத் தாள்களில் யார், யாருடைய கை பட்டிருக்குமோ தெரியாது. சாமிக்குத்தானே! கொஞ்சம் சுத்தமாக இருக்கவேண்டுமல்லவா? அதுதான் அப்படி செய்தேன்” என்றாராம்.
இதுகொஞ்சம் ஓவராக இருந்தாலும், பய பக்தியாக இருக்கும் பக்தர்களின் பணத்தை, சுரண்டுவதிலேயே பல வழிபாட்டிடங்கள் குறியாக இருக்கின்றன என்பதை நினைத்தால்தான், ஊர்க்குருவிக்கு கண்ணீர் வருகிறது.
6 minute ago
14 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
14 minute ago
32 minute ago
47 minute ago