Editorial / 2024 டிசெம்பர் 02 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டிலிருந்து ஆண்களை முச்சந்திக்கு அனுப்பிவைத்துவிட்டு, பெண்ணையும் யுவதியையும் ஓர் அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஹாலிஎல போகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
45 வயதான பெண்ணும் 19 வயதான யுவதியுமே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பேயோட்டுவதற்காக வந்திருந்த பூசாரி, வீட்டிலிருந்த சகல ஆண்களையும் முச்சந்திக்கு அனுப்பிவைத்துள்ளதார். தான் அழைக்கும் வரையிலும் வீட்டுக்கு திரும்பக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அவ்வாறே, ஆண்களும் முச்சந்திக்கு சென்றுவிட்டனர்.
அதன்பின்னர், பேயோட்டுவதாகக் கூறி, அந்தப் பெண்ணையும் யுவதியையும் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர், மெதிரிகிரியவைச் சேர்ந்த 41 வயதானவர் எனத் தெரிவித்த பொலிஸார், அவரை, நீதவான் முன்னிலையில் இன்றையதினம் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
49 minute ago
7 hours ago
16 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
7 hours ago
16 Jan 2026