2022 மே 20, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: மே 13

Ilango Bharathy   / 2022 மே 13 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1648: டில்லி செங்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது.

1787: அவுஸ்திரேலியாவில் புதிய குடியேற்றமொன்றைஅமைப்பதற்காக இங்கிலாந்திலிருந்து குற்றவாளிக் கைதிகளைக் கொண்ட 11 கப்பல்களுடன் கப்டன் ஆர்தர் பிலிப் புறப்பட்டார்.

1846: மெக்ஸிகோ மீது அமெரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.

1912: பிரித்தானிய விமானப்படை ஸ்தாபிக்கப்பட்டது.

1917: போர்த்துக்கலில் பாத்திமா மாதா தமக்கு காட்சியளித்ததாக 3 சிறுமிகள் அறிவித்தனர்.

1939: அமெரிக்காவில் முதலாவது வர்த்தக எவ்.எம். வானொலி ஆரம்பிக்கப்பட்டது.

1940: பிரான்ஸை ஜேர்மனியப் படைகள் வெற்றிகொள்ளத் தொடங்கின.

1940: ஜேர்மனியின் படையெடுப்பின் காரணமாக நெதர்லாந்து ராணி வில்ஹெல்மினா பிரட்டனுக்கு தப்பிச் சென்றார்.

1942: இந்திய நாடாளுமன்ற ராஜ்ய சபாவின் முதல் அமர்வு நடைபெற்றது.

1967: கலாநிதி ஸாகிர் ஹூஸைன் இந்தியாவின் 3 ஆவது ஜனாதிபதியானார். இந்தியாவின் முதல் முஸ்லிம் ஜனாதிபதி இவராவார்.

1972: ஜப்பானின் ஒசாகா நகரில்  மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்ட தீயினால் 118 பேர் பலி.

1981: வத்திகானில் சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் 20,000 மக்களை ஆசிர்வதித்துக் கொண்டிருந்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் மீது துருக்கிய பிரஜையான மெஹ்மெட் அலி 4 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதனால் பாப்பரசரின் வயிற்றிலும் கையிலும் காயமேற்பட்டது.

1996: பங்களாதேஷ் சூறாவளியில் 600பேர் பலி.

1997: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

1998: இந்தியா இரு நாள் இடைவெளியில் இரண்டாவது தடவையாக அணுகுண்டு சோதனை நடத்தியது. அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியா மீது பொருளாதார தடை விதித்தன.

2005: உஸ்பெக்கிஸ்தானில் அண்டிஜான் என்ற இடத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 187பேர் கொல்லப்பட்டனர்.

2006: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை படுகொலை செய்யப்பட்டனர்.

2006: தி.மு.க தலைவர் மு.கருணாநிதி 5ஆவது முறையாக தமிழக முதல்வர் பதவியை ஏற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .