Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 13 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
1111: ஐந்தாம் ஹென்றி, புனித ரோம் பேரரசின் மன்னனாக முடி சூடினான்.
1605: ரஷ்யாவின் சார் மன்னன், பொரிஸ் குடுனோவ் மரணமானான். இரண்டாம் ஃபியோதர் சார் மன்னனானான்.
1829: பிரித்தானிய நாடாளுமன்றம், ரோமன் கத்தோலிக்கர்களுக்கு மத உரிமை அளித்தது.
1849: ஹங்கேரி நாடு குடியரசானது.
1861: அமெரிக்க உள்நாட்டுப் போர் - சம்ட்டர் கோட்டை அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தது.
1868: பிரித்தானிய மற்றும் இந்தியப் படைகள், மக்டாலாவைக் கைப்பற்றியதில், அபினீசியப் போர் முடிவுக்கு வந்தது.
1873: ஐக்கிய அமெரிக்காவின் லூசியானாவில், கோல்ஃபாக்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறையில், 105 கறுப்பினத்தவர்களும் 3 வெள்ளையினத்தவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
1919: ஜாலியன்வாலா பாக் படுகொலை - அம்ரித்சரில் ஜாலியன்வாலா பாக் திடலில் கூடியிருந்த மக்களை நோக்கி, பிரித்தானியப் படையினர் சுட்டதில், 379 பேர் உயிரிழந்தனர்.
1930: மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாக்கிரகத்துக்கு ஆதரவாக, தென்னிந்தியாவில் ராஜாஜி தலைமையில் பாத யாத்திரை தொடங்கப்பட்டது.
1939: இந்தியாவில், இந்தியச் செம்படை என்ற இராணுவ அமைப்பு, பிரித்தானியர்களுக்கு எதிரான ஆயுதப்போராட்ட அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
1941: ஜப்பானுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில், அணிசேரா உடன்பாடு எட்டப்பட்டது.
1943: இரண்டாம் உலகப் போர் - போலந்தில் கட்டின் என்ற இடத்தில், சோவியத் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலந்து போர்க் கைதிகளின் புதைகுழிகளைத் தாம் கண்டுபிடித்ததாக, ஜெர்மனி அறிவித்தது.
1945: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியில் கார்டெலகான் என்ற இடத்தில், ஆயிரம் போர் மற்றும் அரசியல் கைதிகள் நாசிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1953: இயன் ஃபிளமிங் தனது முதலாவது ஜேம்ஸ் பொண்ட் புதினத்தை வெளியிட்டார்.
1954: காமராசர் சென்னை மாநிலத்தின் முதல்வரானார்.
1970: அப்பல்லோ 13 விண்கலத்தில் ஆக்சிஜன் தாங்கி வெடித்தது.
1974: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது வணிக செய்மதி வெஸ்டார் 1 ஏவப்பட்டது.
1975: லெபனானில் 27 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1979: இலங்கையில் சுயாதீன தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
50 minute ago
57 minute ago
1 hours ago